கைது செய்யப்படும்போது காருக்குள் பதுங்கிய ஆண்ட்ரூவின் புகைப்படம் பிரான்ஸ் அருங்காட்சியகத்தில்

Royal Family
By Balamanuvelan Feb 24, 2026 07:45 AM GMT
Report

இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்படும்போது, ஊடகவியலாளர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக காருக்குள் மறைந்துகொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால், அந்தக் காட்சியையும் ஒரு புகைப்படக்கலைஞர் படம் பிடித்துவிட்டார்.

கைது செய்யப்படும்போது காருக்குள் பதுங்கிய ஆண்ட்ரூவின் புகைப்படம் பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் | Andrew Police Custody Photo In Louvre Museum

இந்நிலையில், அந்த புகைப்படத்தை, பிரான்சின் பிரபல அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள் அரசியல் பிரச்சார அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர்.

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ஆண்ட்ரூவின் புகைப்படம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பிரபல அருங்காட்சியகமான Louvre அருங்காட்சியகத்தில், ஆண்ட்ரூவின் புகைப்படம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும்போது காருக்குள் பதுங்கிய ஆண்ட்ரூவின் புகைப்படம் பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் | Andrew Police Custody Photo In Louvre Museum

அந்த புகைப்படத்தை, Everyone Hates Elon என்னும் பிரித்தானிய அரசியல் பிரச்சார அமைப்பு காட்சிப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்படும்போது, ஊடகவியலாளர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக, காரின் பின் இருக்கையில் சாய்ந்து மறைந்துகொள்ள முயற்சித்துள்ளார். 

அமெரிக்க தூதருக்கு பிரான்ஸ் சம்மன்: பின்னணி

அமெரிக்க தூதருக்கு பிரான்ஸ் சம்மன்: பின்னணி

ஆனால், ராய்ச்சர்ஸ் பத்திரிகையின் புகைப்படக் கலைஞரான ஃபில் நோபல் (Phil Noble) அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்துவிட்டார்.

தற்போது, அந்த புகைப்படம்தான் Louvre அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்துக்கு, ’இப்போது உண்மையாகவே ஆண்ட்ரூவுக்கு வியர்க்கிறது’ (He’s Sweating Now) என பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம் என்னவென்றால், ஆண்ட்ரூவின் முகத்திரையைக் கிழித்த விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் இளம்பெண், ஆண்ட்ரூ, தான் சிறுமியாக இருக்கும்போது தன்னுடன் உடல் ரீதியான உறவு கொண்டதாக பேட்டி கொடுத்த நேரத்தில், தானும் ஆண்ட்ரூவும் லண்டனிலுள்ள இரவு விடுதி ஒன்றில் நடனமாடும்போது, ஆண்ட்ரூவின் கைகள் பயங்கரமாக வியர்த்ததாக கூறியிருந்தார். 

கைது செய்யப்படும்போது காருக்குள் பதுங்கிய ஆண்ட்ரூவின் புகைப்படம் பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் | Andrew Police Custody Photo In Louvre Museum

அதைத் தொடர்ந்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆண்ட்ரூ, தான் எந்த தவறும் செய்யவில்லை, விர்ஜினியாவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில், எனக்கு ஒரு மருத்துவ பிரச்சினை உள்ளது.

கைது செய்யப்படும்போது காருக்குள் பதுங்கிய ஆண்ட்ரூவின் புகைப்படம் பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் | Andrew Police Custody Photo In Louvre Museum

அதனால் எனக்கு வியர்க்காது, அப்படி இருக்கும்போது விர்ஜினியா எனக்கு பயங்கரமாக வியர்த்தது என கூறியது எப்படி உண்மையாக இருக்கமுடியும் என்னும் ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களால் ஆண்ட்ரூ குறித்த பல மோசமான உண்மைகள் வெளிவர, வகையாக சிக்கிக்கொண்ட ஆண்ட்ரூ கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

இந்நிலையில், ஆண்ட்ரூ காருக்குள் பதுங்கும் அந்த புகைப்படத்தைக் கண்ட விர்ஜினியாவின் சகோதரரான ஸ்கை ராபர்ட்ஸும் அவரது மனைவியான அமண்டாவும் (Sky and Amanda Roberts), விர்ஜினியா கூறியதையும், அதற்கு ஆண்ட்ரூ பதிலளித்ததையும் நினைவுகூரும் வகையில், ’இப்போது ஆண்ட்ரூவுக்கு உண்மையாகவே வியர்க்கும் என்று நினைக்கிறோம்’ என்று கூறியுள்ளார்கள். 

கைது செய்யப்படும்போது காருக்குள் பதுங்கிய ஆண்ட்ரூவின் புகைப்படம் பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் | Andrew Police Custody Photo In Louvre Museum

ஆகவேதான், Louvre அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆண்ட்ரூவின் புகைப்படத்துக்கு, ’இப்போது உண்மையாகவே ஆண்ட்ரூவுக்கு வியர்க்கிறது’ என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US