பிரித்தானிய மகாராணியாரின் கணவருடைய நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்க அவரது மகனுக்கு அனுமதி கிடைக்காது... வெளியாகியுள்ள தகவல்
மார்ச் 29ஆம் திகதி, மறைந்த பிரித்தானிய இளவரசரும், பிரித்தானிய மகாராணியாரின் கணவருமான இளவரசர் பிலிப்பின் நினைவு நாள் அநுசரிக்கப்பட உள்ள நிலையில், அவரது மகனான இளவரசர் ஆண்ட்ரூவிற்கு அந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடைக்காது என ராஜ குடும்ப விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ, Virginia Roberts என்ற பருவம் அடையாத இளம்பெண்ணுடன் பாலுறவு வைத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட விடயம் பிரித்தானியாவிலும், ராஜ குடும்பத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்ட்ரூவை ராஜ குடும்ப பொறுப்புகள் மற்றும் இராணுவ பொறுப்புகளிலிருந்து வெளியேறுமாறு மகாராணியார் உத்தரவிட, ராஜ குடும்பத்தார் அவருடனான உறவை முறித்துகொண்டார்கள்.
இந்நிலையில், இந்த பிரச்சினை Virginia Robertsக்கு பெருந்தொகை ஒன்று கையளிக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு வெளியே, தீர்க்கப்பட்டுவிட்டது.
ஆனாலும், மார்ச் 29ஆம் திகதி, மறைந்த இளவரசரும், மகாராணியாரின் கணவருமான பிலிப்பின் நினைவு நாள் அநுசரிக்கப்பட உள்ள நிலையில், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின்போது புகைப்படங்களில் இடம்பெற்ற ஆண்ட்ரூவிற்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காது, அவர் அந்த நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார் என ராஜ குடும்ப நிபுணரும், சட்டத்தரணியுமான Mark Stephens என்பவர் தெரிவித்துள்ளார்.