புற்றுநோயால் இறந்த மனைவி: தன்னைவிட 18 வயது குறைவான பெண்ணை மணந்த இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், தன்னை விட 18 வயது இளைய பெண்ணை மறுமணம் செய்தது செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
முன்னாள் அணித்தலைவர்
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் (Andrew Strauss) இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர் ஆவார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி ரூத் மெக்டொனால்ட், கடந்த 2018ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், தனது காதலி அன்டோனியா லின்னேயஸ்-பீட்டை (Antonia Linnaeus-Peat) டிசம்பர் 22ஆம் திகதி ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மறுமணம் செய்தார்.

இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவின் Franschhoek நகரில் ஒரு தனிப்பட்ட விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.
குடும்ப உறுப்பினர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இதில் இவர்களின் மகன்களான சாமுவேல் மற்றும் லூகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த திருமணம் தற்போது செய்திகளில் பேசுபொருளாகியுள்ளது. ஏனென்றால் இருவரது வயது வித்தியாசம் தான்.
18 வயது வித்தியாசம்
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸிற்கு தற்போது வயது 48. அவரது மனைவி அன்டோனியாவிற்கு 30 வயது என்பதால், 18 வயது இளைய பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளார்.
மக்கள் தொடர்பு நிர்வாகியாக செயல்பட்ட அன்டோனியா, தற்போது Fine Art Advisory Limited நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 2019ஆம் ஆண்டில் தனது முதல் மனைவியின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவினார்.

இதன்மூலம் புற்றுநோயால் பெற்றோரை இழந்த குடும்பங்களுக்கு அவர் ஆதரவு அளித்து வருகிறார். இந்த அறக்கட்டளை புகைப்பிடிக்காதவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிக்காகவும் நிதி திரட்டுகிறது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பெர்க்கில் பிறந்த ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், தனது 6வது வயதில் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |