இலங்கை - வங்கதேசம் டெஸ்டில் சைமண்ட்ஸிற்கு மௌன அஞ்சலி
மறைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸிற்கு இலங்கை மற்றும் வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸின் திடீர் மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் நடக்கும் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில், சைமண்ட்ஸிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜாஹூர் அகமது சௌத்ரி மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சைமண்ட்ஸை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்னே பேட்டிங்கை தெரிவு செய்தார். அதன்படி இலங்கை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
Sri Lanka won the toss and opted to bat first.#BCB #cricket pic.twitter.com/KKJTJdW2Cw
— Bangladesh Cricket (@BCBtigers) May 15, 2022