இளவரசர் ஆண்ட்ரூவுக்கு உதவப்போவதில்லை... மன்னர் சார்லஸ் தரப்பு உறுதி
Prince Andrew warned he cannot use King's private money for legal action after arrest: இளவரசர் ஆண்ட்ரூ பொலிசாருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்குக்காக மன்னரின் பணத்தை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் தொடர்பிலிருந்த விடயம் தொடர்பில் இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட விடயம் நினைவிருக்கலாம்.

தம்பிக்கு உதவப்போவதில்லை...
தான் கைது செய்யப்பட்டபோது, தன் வீடுகளை பொலிசார் சோதனையிட்டது தொடர்பில் தேம்ஸ் வேலி பொலிசார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் ஆண்ட்ரூ.

மன்னர் சார்லஸ், தன் தம்பி என்னும் முறையில் இன்னமும் ஆண்டுதோறும் ஆண்ட்ரூவுக்கு பண உதவி செய்துவருகிறார்.
என்றாலும், தற்போது ஆண்ட்ரூ பொலிசாருக்கு எதிராக வழக்குத்தொடர்ந்துள்ள நிலையில், ஆண்ட்ரூவுக்கு மன்னர் வழங்கும் பணத்தை தனது வழக்குச் செலவுகளுக்காக ஆண்ட்ரூ பயன்படுத்தக்கூடாது என மன்னர் தரப்பிலிருந்து ஆண்ட்ரூவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.