உங்கள் செல்போனில் இந்த 7 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் இருந்தால் உடனே நீக்கவும்! எச்சரிக்கை
உங்கள் மொபைலில் சில ஆண்டிராய்டு ஆப்ஸ் இருந்தால் உடனே நீக்க வேண்டும்.
ஏனெனில், உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப்பை நீங்கள் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள் என்றாலும் உங்களுடைய டேட்டா அனைத்துமே, நீங்கள் பயன்படுத்தும் செயலிகளால் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஃபேஸ்புக் வழியே லாகின் செய்ய அனுமதிக்கும் சில ஆப்ஸ் மூலம் நம்முடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் மிகவும் சென்சிட்டிவான தகவல்களை சைபர் கிரிமினல்கள் திருடி வருகின்றனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
Smartphoneல் இணையம் பயன்படுத்துபவரா? இனி ஜாக்கிரதையா இருங்க
Daily Fitness OL – உங்கள் பிட்நெஸ் செயல்பாடுகள் பற்றி டிராக் செய்யும் செயலி, உங்கள் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி அதன் மூலம் தகவல்களைத் திருடுகிறது
Enjoy Photo Editor – சமீபகாலமாக பல விதமான போட்டோ எடிட்டர் செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் நீங்கள் தவிர்க்க வேண்டியது இந்த செயலி.
Panorama Camera – புகைப்படங்களை வெவ்வேறு கோணத்தில் எடுக்க பயன்படும் செயலி.
Photo Gaming Puzzle – புகைப்படங்களை சரியாக வைக்கும் புதிர் விளையாட்டு
Swarm Photo – ஒரு சோஷியல் மீடியா செயலி, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை பகிர்ந்து, அதன் புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். இதன் மூலம், உங்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்படுகிறது.
Business Meta Manager – மெடா நிறுவனத்தின் பிசினஸ் ஆப்
Crypto Farm your Coin – நீங்களே சொந்தமாக கிரிப்டோ கரன்சி உருவாக்கலாம் என்ற ஆபத்தான செயலி