Smartphone தொலைந்துவிட்டதா? அதை கண்டுபிடித்து தரவுகளை நீக்குவது எப்படி?
உங்கள் Smartphone தொலைந்து போனால், அதை கண்டுபிடித்து லாக் செய்து, அதிலுள்ள தரவுகளை எப்படி நீக்குவது என்பது குறித்து இங்கே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இரையை காலகட்டத்தில் Smartphone இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத அளவிற்கு நமது அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள், மேலும் பல தரவுகளை சேமித்து வைத்திருப்போம்.
எனவே, ஸ்மார்ட்போன் தொலைந்து போவதை நிச்சயம் நம்மால் தாங்கி கொள்ள முடியாது. இப்படியான நிலையில், தொலைந்து போன ஸ்மார்ட்ஃபோனை எளிதாகக் கண்டுபிடிக்கவும், கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் அதில் உள்ள தரவுகளை எப்படி அழிப்பது என்பதை பற்றியும் விரிவாக இங்கே பார்க்கலாம்.
தொலைந்து போன ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க முதலில் நீங்கள் android.com/find என்கிற லிங்க்கை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும். இதில் உங்களின் கூகுள் அக்கவுண்ட் பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக, உங்களின் மொபைல் பற்றிய தகவல்கள் மேல்புறத்தில் தோன்றும்.
பிறகு தொலைந்து போன மொபைலில் நீங்கள் லாகின் செய்துள்ள Google அக்கவுண்ட் விவரத்தை உள்ளிடவும். பிறகு தொலைந்து போன மொபைலில் நோட்டிபிகேஷன் வரும்.
பின்னர், திரையில் காணப்படும் மேப் மூலம் உங்கள் மொபைல் எங்கே உள்ளது என்பதை அறிய முடியும். அதாவது கடைசியாக உங்கள் மொபைல் எங்கு இருந்ததோ அந்த இடத்தின் லொகேஷன் அதில் காட்டப்படும். ஒருவேளை அந்த இடத்தில் மொபைல் இல்லையென்றால் உடனடியாக Lock and erase என்கிற ஆப்ஷனை எனேபிள் செய்து விடுங்கள்.
பிறகு, உங்கள் மொபைலில் 5 நிமிடம் ரிங் அடிக்கப்படும். இதை Play Sound என்கிற ஆப்ஷன் பயன்படுத்தி செய்யலாம். உங்கள் மொபைலை லாக் செய்வதற்கு Secure device என்பதை கிளிக் செய்யவும். இதன் மூலம் உங்களின் பின் நம்பர், பேட்டர்ன் அல்லது பாஸ்வேர்டு லாக் ஆகியவை ஆகிவிடும்.
மேலும் ஒருவேளை தவறுதலாக மொபைல் வேறு யாரிடமோ சென்று விட்டால் அதை உங்களிடம் திருப்பி அனுப்ப நீங்கள் ஒரு மெசேஜ் அனுப்பி பார்க்கலாம். உங்களின் தொலைந்து போன மொபைலில் உள்ள தரவுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழிப்பதற்கு Erase device என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து போனில் உள்ள எல்லாவற்றையும் நீக்கி விடுலாம்.
ஆனால் மெமரி காரட்டில் உள்ள தரவுகளை அழிக்க இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்கள் தரவுகளை அழித்த பிறகு மொபைல் உங்களுக்கு கிடைத்து விட்டால், உங்கள் கூகுள் அக்கவுண்ட் லாகின் செய்து சில தரவுகளை பெறலாம்.
Android மூலம் கண்டுபிடிப்பது:
தொலைந்து போன உங்கள் மொபைலை ஆண்ட்ராய்டு மொபைல் அல்லது டேப்லட் மூலம் கண்டுபிடிக்கலாம். இதற்கு Find My Device என்கிற செயலியை திறந்து கொள்ளவும். ஒருவேளை தொலைந்து போன மொபைலில் இந்த ஆப் இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை.
இந்த செயலியில் லாகின் செய்து Continue என்பதை கிளிக் செய்யவும். அடுத்து உங்களின் பெயரை டைப் செய்யவும். உங்கள் நண்பர் மொபைலை தேடுகிறீர்கள் என்றால் அவரின் பெயரை குறிப்பிடுங்கள். இறுதியாக மேற்சொன்ன முறைகளை இவற்றிலும் செய்தாலே போதும்.
Smart Watch:
ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தியும் தொலைந்து போன மொபைலை கண்டுபிடிக்க முடியும். இதற்கு உங்கள் மொபைல் ஸ்மார்ட் வாட்சுடன் ப்ளூடூத் மூலம் கனெக்ட் ஆகி இருக்க வேண்டும்.
மொபைல் எங்கே உள்ளது என்பதை அறிய, ஸ்மார்ட் வாட்சில் பவர் பட்டனை கிளிக் செய்து அதிலுள்ள Find my phone ஆப்ஷனை கிளிக் செய்யவும். பிறகு தொலைந்து போல மொபைலில் ரிங் அடிக்கப்படும். இதன்மூலம் கண்டுபிடிக்கலாம்.