ஆண்ட்ராய்டு Smart Phoneல் இந்த தவறை செய்ய வேண்டாம்! எச்சரிக்கை தகவல்
உலகம் முழுவதிலும் பிரபலமாக உள்ளது ஆண்ட்ராய்டு இயங்குதளம்..! ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் எச்சரிக்கையுடன் சில விடயங்களை பின்பற்றவேண்டும்.
பாஸ்வேர்டுகள்
உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வித்தியாசமான எழுத்துகள் மற்றும் குறியீடுகளைக் கொண்ட கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குங்கள். ஏனெனில் பாஸ்வேர்ட்களை கூட எளிதாக ஒன்லைன் கொள்ளையர்கள் கண்டுபிடித்து விடுகின்றனர்.
kakakumag
ஆன்டிவைரஸ் செயலிகள் (ஆப்ஸ்)
ஸ்மார்ட்போன் இணையத்தோடு தொடர்பு கொள்கிறது; தீங்கு செய்யக்கூடிய அநேக செயலிகள், நிரல்கள் (மால்வேர்) தாக்கக்கூடும் என்பது நன்றாகவே தெரிந்தும் யாரும் ஆன்ட்டிவைரஸ் செயலியை பயன்படுத்துவதில்லை. ஸ்மார்ட்போனில் ஏற்கனவே இருக்கக்கூடிய பாதுகாப்பு, புதிய வகை வைரஸ்களை தடுப்பது கடினம். ஆகவே, கட்டணம் செலுத்தி பெறக்கூடிய ஆன்ட்டிவைரஸ் செயலியை பயன்படுத்துங்கள். அவை மால்வேர் மற்றும் ஸ்பைவேர் தாக்கும்போது உங்களை எச்சரிப்பதோடு ஸ்மார்ட்போனையும் பாதுகாக்கும்.
மூன்றாம் நபர் செயலிகள் வேண்டாம்
ஸ்மார்ட்போனின் செட்அப் பகுதியில் அறிமுகமில்லாத செயலிகள் தரவிறக்கம் செய்யப்படுவதை தடுத்து (ஆஃப்) வைப்பது நல்லது.
திருட்டிலிருந்து பாதுகாப்பு
புதிதாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியதுமே கூகுளின் ஃபைண்ட் டிவைஸ் சேவையை செயல்படுத்துங்கள். இது உங்கள் போன் திருடப்பட்டாலும் கண்டுபிடிக்க உதவும்.
நிபந்தனைகள்
பல நேரங்களில் செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை நாம் தருகிறோம், இந்த தப்பை மட்டும் செய்யவே கூடாது. மீறினால் அவை தகவல்களை நம்மிடமிருந்து திருடுவதற்கு நாமே வழிவிட்டது போல ஆகிடும். ஆகவே எந்தச் செயலியையும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுவதுமாக வாசிக்காமல் தரவிறக்கம் செய்யவேண்டாம்.
Steven Winkelman