உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து இந்த 5 செயலிகளை உடனே நீக்கிவிடுங்கள்! எச்சரிக்கை புகைப்படங்கள்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏராளமான செயலிகள் கொட்டி கிடக்கின்றன.
அதில் நாம் பலவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறோம். அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் 5 தீங்கிழைக்கும் செயலிகளிடம் உஷாராக இருக்க வேண்டுமென பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் Maxime Ingrao எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அதை பதிவிறக்கம் செய்திருந்தால் தொடர்ந்து போனிலேயே இருந்து ஆபத்தை கொடுக்கும்.
அதன்படி கீழே கூறப்பட்டுள்ள செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள்.
1. Vlog Star Video Editor (Vlogging ஆப்ஸ் 1 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது)
gadgetsnow
2.Creative 3D Launcher (இந்த செயலி ஸ்மார்ட்போனின் முகப்புத் திரைக்கு 3D தோற்றத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது, இது 1 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கொண்டுள்ளது)
3. Funny Camera (பெயரே சொல்லும் இது கெமரா சம்மந்தப்பட்ட செயலி என்பதை! இது 500,000க்கும் அதிகமான பதிவிறக்கங்களை கொண்டுள்ளது.)
gadgetsnow
4. Wow Beauty Camera (இதுவும் கெமரா செய்லி தான், 100,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது)
gadgetsnow
5. Razer Keyboard & Theme ஆபத்தான விசைப்பலகை செயலியான இது பயனர்களுக்கு Gif எமோஜிகளுடன் கீபோர்டுகளை வழங்குவதாகக் கூறுகிறது. இது 100,000+ பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது.
gadgetsnow