பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் எப்போது? பிரதமரின் பதில்
No general election before 2029, Andy Burnham says: 2029ஆம் ஆண்டுக்கு முன் பொதுத்தேர்தல் நடைபெறாது என்று கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
ரிஷி சுனக் எப்படி பிரித்தானிய பிரதமர் ஆனார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர்
பிரித்தானிய பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்ய, அவரது இடத்தில் பிரதமரானார் லிஸ் ட்ரஸ்.
அவரும் தன் பதவியை ராஜினாமா செய்ய, அந்த இடத்தில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்றார் ரிஷி சுனக்.

ஆக, அவர் பொதுத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று பிரதமர் ஆகவில்லை. பின்னர் 2024இல் தேர்தலை சந்தித்தபோது, அவரது கட்சி தோல்வியைத் தழுவியது.
அப்போதுதான், பிரம்மாண்ட வெற்றி பெற்று லேபர் கட்சியின் தலைவரான சர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமரானார்.
எழுந்த கேள்வி
இந்நிலையில், ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய, அந்த இடத்தில் பிரதமர் ஆனார் ஆன்டி பர்னாம்.
ஆக, இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர்களிடம் எப்போதுமே ஊடகவியலாளர்கள் ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு.

அது, எப்போது நீங்கள் பொதுத்தேர்தலை சந்திக்கப்போகிறீர்கள் என்பதுதான்!
ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், தாங்களாகவே பிரதமர் இருக்கையில் அமர்ந்துகொள்ளும் பிரதமர்கள் தேர்தலை சந்திக்கும்போது என்ன ஆகும் என்பதற்கு ரிஷி சுனக் நல்ல உதாரணங்கள்.
அப்படி இருக்கும்போது, தேர்தலை அறிவிப்பாரா என்ன ஆன்டி பர்னாம்?
ஊடகவியலாளர்கள் தேர்தல் எப்போது என கேள்வி எழுப்ப, 2029க்கு முன் தேர்தல் அறிவிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.