போரில் உக்ரைனுடன் நிற்கிறோம், பின்வாங்க மாட்டோம்: பிரித்தானிய பிரதமர் ரஷ்யாவிற்கு பதிலடி
UK PM Andy Burnham arrives in kyiv: ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என பிரித்தானிய பிரதமர் பர்ன்ஹாம் உக்ரைனில் பேசியுள்ளார்.
அதி இரகசிய ஏவுகணை திட்டங்களை ஒப்படைப்பதற்காக உக்ரைன் வந்தடைந்த பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம், உக்ரைனுடன் நிற்கிறோம், பின்வாங்க மாட்டோம் என ரஷ்யாவிற்கு கூறினார்.
பிரித்தானியாவின் ட்ரோன் விமானங்கள்
ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, பிரித்தானியாவின் ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது.
அத்துடன் பிரித்தானியா எந்த அளவிற்கு இதில் ஆழமாக ஈடுபடுகிறோ, அந்த அளவிற்கு அது அதிக விலையைக் கொடுக்கும் என்றது. இந்த சூழலில், பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக உக்ரைன் வந்தடைந்தார்.
இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். உக்ரைனின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "உக்ரைனின் 35வது சுதந்திர தினத்தில், அதன் மக்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது: பிரித்தானியா உங்களுக்குப் பின்னால் இருக்கிறது.
வரவிருக்கும் போராட்டத்திலும், புனரமைப்பிலும் நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம். எங்கள் உறுதியைப் பற்றி ரஷ்யாவிற்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.
ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்றார். மேலும், அவர் அதி இரகசிய ஸ்டோர்ம் ஷேடோ ஏவுகணைத் திட்டங்களை ஒப்படைக்க உள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |