450-க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் திரும்பவே இல்லை: அமெரிக்க செயலருக்கு பிரித்தானியா கண்டனம்
Andy burnham spokesman rebukes hegseth speech: அமெரிக்க போர் செயலர் பீட் ஹெக்ஸெத்திற்கு பிரித்தானிய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நட்பு நாட்டுப் படைகளின் பங்களிப்பை கேலி செய்ததற்காக, அமெரிக்க போர் செயலர் பீட் ஹெக்ஸெத்திற்கு பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பீட் ஹெக்ஸெத்தின் பேச்சு
அமெரிக்க போர் செயலர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) சமீபத்தில் பயிற்சி மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் ISAF சின்னம் என்பது 'சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை' (International Security Assistance Force) என்பதற்கு பதிலாக, 'நான் அமெரிக்கர்கள் சண்டையிடுவதை பார்த்தேன்' (I Saw Americans Fighting) என்பதைக் குறிக்கிறது என்று நகைச்சுவையாகக் கூறினார்.
மேலும், சண்டையில் 5 நாடுகள் பங்கு வகித்ததாகவும், போர் நடவடிக்கையின் முடிவில் அது ஒன்று அல்லது இரண்டு நாடுகளாக மட்டுமே இருந்ததாகவும் கூறினார்.
ஹெக்ஸெத்தின் இந்தப் பேச்சிற்கு பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் (Andy Burnham) தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.
பெரும் தியாகங்களை செய்தனர்
ஆண்டி பர்ன்ஹாமின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'பாருங்கள், வெளிப்படையாக சொல்வதானால், ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து மற்றும் நேட்டோவின் பங்களிப்பை பொறுத்தவரை, உண்மைகளே பேசுகின்றன.
ஆயிரக்கணக்கான பிரித்தானியர் மற்றும் நட்பு நாட்டு குடும்பங்கள் அந்தப் போரில் தங்களின் முக்கியப் பங்கையாற்றுவதற்கும், நமது விழுமியங்களை காப்பதற்கும் பெரும் தியாகங்களை செய்தனர். மேலும், 450-க்கும் மேற்பட்ட பிரித்தானிய வீரர்கள் திரும்பி வரவே இல்லை.
அவர்களது தியாகமும், மற்ற நேட்டோ படைகளின் தியாகமும், கூட்டுப் பாதுகாப்பிற்காகவும், நமது நட்பு நாட்டின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாகவும் செய்யப்பட்டன' என்றார். அத்துடன் நேட்டோவின் தியாகங்களை குறைத்து மதிப்பிடுவது தவறு என்று குறிப்பிட்டார்.
