பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்
பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் ஆன்டி பர்னாம்.
பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்
கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவந்த ஆன்டி பர்னாம், சமீபத்தில் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அதைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம், சற்று முன் மன்னரை சந்தித்து பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் 59ஆவது பிரதமர் ஆவார். அவருக்கு முன் பிரதமராக பதவி வகித்த சர் கெய்ர் ஸ்டார்மர் சற்று முன் மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளிக்க, மன்னர் அதை ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்ற ஆன்டி பர்னாம் மன்னர் சார்லசை சந்தித்தார்.

மன்னர் சார்லஸ் முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்கும்படி ஆன்டி பர்னாமைக் கேட்டுக்கொள்ள, அதை ஏற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராகியுள்ளார்.
அதற்கு அடையாளமாக, ஆன்டி பர்னாம், மன்னர் சார்லசுடன் கைகுலுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராக முறைப்படி மன்னர் சார்லசால் நியமிக்கப்பட்டதைக் குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஆன்டி பர்னாம், மேன்மை தங்கிய மன்னரை சந்தித்த நிலையில், புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு ஆன்டி பர்னாமை மன்னர் கேட்டுக்கொண்டார்.
மன்னரின் அழைப்பை ஏற்ற ஆன்டி பர்னாம், பிரதமராகவும் கருவூலத்தின் முதல் பிரபுவாகவும் பதவி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மன்னரின் கைகளில் முத்தமிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக, ஆன்டி பர்னாம், பிரதமர் இல்லம் முன் உரையாற்ற இருக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |