இந்தியா எல்லாவற்றையும் ஆணையிடுகிறது! இது நியாயமல்ல..கொந்தளித்த ஜாம்பவான்
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு சாதகமாக அட்டவணை தயார் செய்யப்பட்டதை கண்டித்து மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் ஆன்டி ராபர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தினாலும், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றன.
அப்போதே இது குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கிண்ணத்தை வென்றதையும் ஒரு தரப்பினர் விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆன்டி ராபர்ட்ஸ் (Andy Roberts) "இந்தியாவால் எல்லாவற்றையும் பெற முடியாது" என ஐசிசியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பயணம் செய்யவே வேண்டியதில்லை. ஒரு அணி ஒரு போட்டியின்போது எப்படி பயணம் செய்யாமல் இருக்க முடியும்? அது நியாயமில்லை, அது கிரிக்கெட் அல்ல. ஒரு சமமான விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து நிறைய பணம் வருகிறது என்பது எனக்குத் தெரியும், ஆனால் கிரிக்கெட் ஒரு நாட்டின் விளையாட்டாக இருக்கக் கூடாது.
இது இப்போது ஒரு நாட்டுடைய தொடர் போல் தெரிகிறது. விளையாட்டு மைதானம் சமமாக இல்லை. ஐசிசி என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் குறிக்கிறது.
இந்தியா எல்லாவற்றையும் அணையிடுகிறது. நாளை இந்தியா No-balls மற்றும் Wides இருக்கக்கூடாது என்று கூறினால், என் வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், கண்டிப்பாக அதற்கும் ஐசிசி ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |