இரத்த சோகை குணமாக- இரும்புச்சத்து அதிகரிக்க உதவும் உணவுகள்.., மருத்துவரின் விளக்கம்
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது தான் இரத்த சோகை.
பெரும்பாலான இரத்த சோகை ஹீமோகுளோபின் குறைபாட்டாலும் இன்னும் சில காரணங்களாலும் ஏற்படுகிறது.
இரத்த சோகை குறித்து மருத்துவர் அருண்குமார் தெளிவாக விளக்கமளித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
இரத்த சோகை ஏற்பட காரணம்
குடல் புண், புற்றுநோய், மூலம், மாதவிடாயின் போது அதிக இரத்த போக்கு, குடல் புழுக்கள் போன்றவற்றாலும் உடலில் இரத்த சோகை ஏற்படுகிறது.
வைட்டமின் B12 மற்றும் ஃபோலேட் ஆகிய சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படுகிறது. எலும்பு மஜ்ஜை வேலை செய்யவில்லை என்றாலும் இந்த இரத்த சோகை ஏற்படுகிறது.
கல்லீரல் நோய், சிறுநீரகம் நோய் போன்றவற்றாலும் இரத்த சோகை ஏற்படுகிறது. மேலும் இரத்த செல்கள் தானாகவே அழிந்துபோவதாலும் இரத்த சோகை ஏற்படுகிறது.
இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்
- பேரிச்சம்பழம்
- உலர் திராட்சை
- முளைகட்டிய பயிர்
- கீரைகள்
- சிகப்பு இறைச்சி, ஈரல்
- காளான்
- பூசணி விதை
- சோயா
இரும்புச்சத்தை அதிகரிக்க என்ன செய்வது?
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ட பின் எலுமிச்சை சாறு, மர நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, இந்த உணவுகளை உண்ட பின் டீ, காபி குடிக்க கூடாது. ஏனெனில் இதை உணவில் உள்ள பாதி அளவு இரும்புச்சத்தை குறைத்து விடுகிறது.
அன்றாட வீட்டில் சமைக்கும் பாத்திரங்களில் இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும்.
B12 சத்தை அதிகரிக்க பால், இறைச்சி, சத்து மாத்திரை போன்றவற்றால் அதிகரிக்கலாம். ஃபோலேட் சத்துக்களை அதிகரிக்க கீரைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |