விஷ ஊசி போட்டு என்னை கொன்னுடுங்க! மார்பகத்தை அகற்றிவிட்டேன்..கண்ணீர்விட்டு கதறும் தமிழ் நடிகை
அங்காடி தெரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், வாழ முடியாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் நடிகை
நடிகை சிந்து நகைச்சுவை வேடங்களில் சில படங்களிலும், சின்னத்திரை வில்லியாகவும் தொடர்களிலும் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அவர் கடந்த 2020ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனால் தனது மார்பகங்கள் அகற்றப்பட்டதாக தெரிவித்த சிந்து தற்போது உயிர் வாழ முடியாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

கதறி அழும் நடிகை
இதுதொடர்பாக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், 'ஆங்கில மருத்துவம், நாட்டு மருத்துவம் என இரண்டையும் மாறி மாறி பார்த்து வருகிறேன். ஆனாலும் எனக்கு குணமாகவில்லை. என் உடல் தான் ஒத்துழைக்கவில்லை. நிறைய நண்பர்கள் எனக்கு உதவி செய்து வருகிறார்கள்.
கணவரை இழந்த என் மகள் கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறார். அவரையும் பார்த்துக் கொள்கிறேன். ஆனாலும் வலியால் துடிக்கிறேன். எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என மருத்துவர்களிடமும் கேட்டுப் பார்த்துவிட்டேன். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. பிறகு ஏன் கடவுள் எனக்கு இப்படி ஒரு வலியை கொடுக்கிறார் என்று தெரியவில்லை' என கதறி அழுதார்.


 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        