தமிழகம் முழுவதும் மூடப்படும் நிலையில் 30 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள்
தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் மூடப்படலாம் என அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
பிறந்தது முதல் 6 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் அடிப்படை கல்வியை சொல்லித் தருவதற்காக அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களையும், நாப்கின் போன்றவற்றையும் அங்கன்வாடி மையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை மூட திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
10க்கும் குறைவான குழந்தைகள் இருந்தால், அதை மற்ற அங்கன்வாடி மையங்களோடு இணைப்பது வழக்கமான நடவடிக்கை தான் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் சுமார் 30 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் மூடப்படலாம் என தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |