காதலியுடன் வாழ்ந்த போது விஷம் வைத்து கொல்லப்பட்ட இலங்கை தாதாவை நினைவிருக்கா? மரபணு பரிசோதனையில் தெரிந்த ஒரு உண்மை

tamilnadu angoda lokka coimbatore
By Raju Nov 16, 2021 01:35 PM GMT
Report

தமிழகத்தின் கோவையில் உயிரிழந்த நபர் இலங்கை போதைப் பொருள் கடத்தல் மன்னனும் தாதாவுமான அங்கொட லொக்காதான் என்பது மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனாக இருந்தவா் அங்கொட லொக்கா. இவர் தமிழகத்தின் கோவை, சேரன்மாநகா் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்தாா்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா 2020 ஜூலை 4இல் உயிரிழந்தாா். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தைப் பெற்று சென்று அம்மானி தான்ஜி மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரையில் தகனம் செய்தனா்.

சி.பி.சி.ஐ.டி. காவலர்கள் நடத்திய விசாரணையில், இலங்கையைச் சோ்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் சிவகாமி சுந்தரி, திருப்பூரைச் சோ்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை காவலர்கள் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

அம்மானி தான்ஜி முகாமில் வைக்கப்பட்டுள்ளாா். அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை கோவை சி.பி.சி.ஐ.டி. காவலர்கள் தேடி வந்தனா்.

காதலியுடன் வாழ்ந்த போது விஷம் வைத்து கொல்லப்பட்ட இலங்கை தாதாவை நினைவிருக்கா? மரபணு பரிசோதனையில் தெரிந்த ஒரு உண்மை | Angela Lokka Died In Coimbatore Conformed

இந்நிலையில், அவா்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. சிவகுமாா் தலைமையில் தனிப்படையினா் பெங்களூரு சென்றனா். பெங்களூரு, குள்ளப்பா சா்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த, இலங்கை, அதுரகிரியாவைச் சோ்ந்த நலின் சதுரங்கா என்ற சனுக்கா தனநாயகா (38), பெங்களூரு, சுப்பையாபாளையத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (46) ஆகியோரை காவலர்கள் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சனிக்கிழமை இரவு கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அங்கொட லொக்காவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுவும், இலங்கை அரசின் உதவியுடன் அங்கிருக்கும் அவரது தாயார் சந்திரிகாவின் மரபணுவும் பரிசோதனை செய்யப்பட்டதில், கோவையில் இறந்தது அங்கொட லொக்காதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US