ஜேர்மனியின் உயரிய விருதைப் பெற்ற ஏஞ்சலா மெர்க்கல்!
ஜேர்மனியின் முன்னாள் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்.
உயரிய விருது
தேசத்திற்கான தனது சிறப்பான சேவைக்காக ஜேர்மனி முன்னாள் ஏஞ்சலா மெர்க்கல், நாட்டின் மிக உயந்த தகுதிக்கான Grand Cross விருதைப் பெற்றார். இதன்மூலம் ஜேர்மனியின் மிக உயரிய விருதை வென்ற மூன்றாவது அரசியல்வாதி என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஜனாதிபதி மாளிகையான Schloss Bellevueயில் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் முன்னாள் சேன்ஸலருக்கு Grand Crossஐ வழங்கினார்.
அத்துடன் மெர்க்கலின் தலைமைத்துவத்தையும், அவரது 16 ஆண்டுகால பதவியியில் பல நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற்றதையும் அவர் பாராட்டினார்.
@REUTERS/Michele Tantussi
ஏஞ்சலா மெர்க்கலை பாராட்டிய ஜனாதிபதி
மேலும் பேசிய ஸ்டெய்ன்மியர், 'உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், உங்கள் பதவிக் காலம் முடிவதற்குள் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக ஜேர்மனியை மேலும் வலுப்படுத்த முடிந்தது' என தெரிவித்தார்.
@Anadolu Agency/Getty
2005ஆம் ஆண்டு ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக பதவியேற்ற மெர்க்கல், கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் உயர் பதவியில் இருந்தார். ஆனால் அவர் 2021யில் மறுதேர்தலை நாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
@John MacDougall/AFP/Getty Images