ஜேர்மன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறாரா ஏஞ்சலா மெர்க்கல்?
ஜேர்மன் ஜனாதிபதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில், ஜேர்மனியின் முன்னாள் சேன்சலரான ஏஞ்சலா மெர்க்கல், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக வதந்திகள் பரவிவருவதாக பிரபல ஜேர்மன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறாரா ஏஞ்சலா மெர்க்கல்?
அது அபத்தமான தகவல் என்று கூறியிருந்தார் ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரான ஏஞ்சலாவின் செய்தித் தொடர்பாளர்.

இந்நிலையில், சமீபத்தில், ஏஞ்சலா மெர்க்கல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறாரா என அவரிடம் நேரடியாகவே கேட்டார் ஊடகவியலாளர் ஒருவர்.
அதற்கு, ‘இல்லை’ என்று பதிலளித்தார், ஏஞ்சலாவின் செய்தித் தொடர்பாளர்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, ஜனாதிபதி பதவி என்பது பெயருக்குதான், அந்த பதவியை வகிப்பவருக்கு பெரிய அளவில் அதிகாரம் எதுவும் கிடையாது.
இதற்கிடையில், ஜேர்மனியின் ஜனாதிபதி பதவிக்கு பெண் ஒருவரை நியமிக்கவேண்டும் என பல தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுவருகிறது.
ஆனால், ஜேர்மனியில் இதுவரை முன்பு சேன்ஸலராக இருந்த யாரும் ஜனாதிபதி பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |