ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரிடமே பிக்பாக்கெட் அடித்த பலே திருடன்
ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தனக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக, தானே ஷாப்பிங் செல்பவர் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
சென்ற வாரம் அவர் அப்படி ஷாப்பிங் சென்றபோது, அவரது பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று, மெர்க்கல் பெர்லினிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்திருக்கிறார்.
தனது கைப்பையில் தனது பர்ஸை வைத்திருந்த மெர்க்கல், அந்த கைப்பையை, பொருட்களை வைத்திருக்கும் ட்ராலியில் தொங்கவிட்டபடி ஷாப்பிங் செய்துகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது யாரோ ஒரு மர்ம நபர் அவரது பர்ஸை பிக்பாக்கெட் அடித்துச் சென்றுள்ளார்.
தனது பர்ஸ் திருட்டுப்போனதை அறிந்த மெர்க்கல், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
இத்தனைக்கும் மெர்க்கலின் பாதுகாவலர்கள் அவருடன் இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!