Germany Elections 2021: முடிவுக்கு வரும் ஏஞ்சலா மெர்கலின் 16 ஆண்டுகால ஆட்சி!
ஜேர்மனியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 16 ஆண்டுகாலமாக இருந்த ஏஞ்சலா மெர்கலின் ஆட்சி நிறைவுக்கு வருகிறது.
ஜேர்மன் பாராளுமன்ற வளாகமான பன்டஸ்டேக்கிற்கான 20-வது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ள இந்த பெடரல் தேர்தல் செப்டம்பர் 26-ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
ஏஞ்சலா மெர்கல் பதவியிலிருந்து விலகியதால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேர்மனிக்கு ஒரு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
ஏஞ்சலா மெர்கல் தனது பதவிக்காலத்தில், உலகளாவிய நிதி நெருக்கடி, ஐரோப்பிய இறையாண்மை கடன் நெருக்கடி மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் உள்ளிட்ட பல பெரிய சவால்களை ஜேர்மனி சந்தித்துள்ளது.
இதன்காரணமாக, பல வர்ணனையாளர்கள் அவரது அமைதியான செயல்திறனைப் பாராட்டியுள்ளனர் .
Photo Credit: AP
2013 முதல் மேர்க்கலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியனுக்கு (CDU) கூட்டணியாக இருந்த சமூக ஜனநாயகவாதிள் கட்சி (Social Democratic Party of Germany-SPD) இந்த தேர்தலில் வெற்றிபெறலாம் என கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. ஆனால் எந்தக் கட்சியும் மகத்தான வெற்றியை அடைய முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SPD-ன் Olaf Scholz தான் மேர்க்கலின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார். அவர் ஏற்கெனவே நிதி அமைச்சராகவும், துணைவேந்தராகவும் இருந்தார். எனவே ஜேர்மன் அரசியல் நிலவரம் கடுமையாக மாற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும், பொருளாதாரத்தை இயக்குவதற்கான அணுகுமுறை மாறும் என்பதால் மக்கள் பயனடைவார்கள், ஏனென்றால் அது மேர்க்கலின் கீழ் சிறப்பாக செயல்படவில்லை - மேலும் தேர்தல் எப்படி இருந்தாலும் இது பொருந்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கீழேயுள்ள கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை, அவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற முக்கிய கூறுகள் எப்படி இருந்தது என்பதைக் காட்டுகிறது. மேர்க்கலின் கீழ் ஜெர்மனியின் பொருளாதாரம்
Picture: The Conversation (OECD, ECB, Bundesbank)
ஒருபுறம், விலைகள் மிகவும் நிலையாக இருப்பதும் மற்றும் பெரும்பாலான மக்கள் வேலையில் இருப்பது ஒரு நல்ல பொருளாதாரத்தின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. அனால், இன்னும் GDP வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நுகர்வு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க ஜேர்மனி அதிக செலவு செய்திருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ஜேர்மன் அரசு அதன் பொருளாதாரத்தை அல்லது வரவு செலவை எப்போதும் சமநிலைப்படுத்துவதில் உறுதியாக இருந்துள்ளது.
மேர்க்கெல் மற்றும் அவருக்கு முந்தைய சான்செலர்களின் கீழ் ஜேர்மன் அரசு தொடர்ந்து ஒரு சீரான பட்ஜெட் ஆட்சியாக இருந்துவந்துள்ளது.
அதேபோல், ஏஞ்சலா மெர்கல் கொரோனா பெருந்தொற்றையும் இதுவரை சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்பட்டுள்ளார்.