ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் ஜோடி அதிகாரப்பூர்வ விவாகரத்து: முடிவுக்கு வந்த 8 ஆண்டுகால சட்டப்போராட்டம்
பிரபல ஹாலிவுட் ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்டின் விவாகரத்து அதிகாரப்பூர்வ முடிவுக்கு வந்துள்ளது.
பிராட்- ஜோலி
ஹாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர் பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி 2014ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்தனர்.
அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஏஞ்சலினா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தார்.
ஆனால், தனது சம்மதமின்றி திராட்சைத் தோட்டத்தின் பங்குகளை ஏஞ்சலினா ஜோலி விற்றதாக பிராட் பிட் குற்றம்சாட்டினார்.
8 ஆண்டுகளாக சட்டப்போராட்டம்
இருவரின் விவாகரத்து தொடர்பான வழக்கு, 8 ஆண்டுகளாக ஒரு போராட்டமாக தொடர்ந்தது.
இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட் தம்பதியின் விவாகரத்து அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து ஏஞ்சலினாவின் வழக்கறிஞர் கூறுகையில், "எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏஞ்சலினா மிஸ்டர் பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தார். அவரும், குழந்தைகளும் அவர்கள் பிட்டுடன் பகிர்ந்துகொண்ட அனைத்து சொத்துக்களையும் விட்டுவிட்டனர். அன்றிலிருந்து அவர் தங்கள் குடும்பத்திற்கு அமைதி மற்றும் குணப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். தற்போது அவர் நிம்மதியடைந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |