14வது சதம் விளாசிய ஏஞ்சலோ மேத்யூஸ்! இலங்கை அணி மிரட்டல் ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் சதம் விளாசியுள்ளார்.
இரண்டாவது இன்னிங்ஸ்
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 355 ஓட்டங்களும், நியூசிலாந்து 373 ஓட்டங்களும் எடுத்தன.
அதனைத் தொடர்ந்து 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஒஷாடா பெர்னாண்டோ 28 ஓட்டங்களிலும், திமுத் கருணரத்னே 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த குசால் மெண்டிஸ் 14 ஓட்டங்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஏஞ்சலோ மேத்யூஸ் நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
14வது சதம்
அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 14வது சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 260 ஆக உயர்ந்தபோது மேத்யூஸ் 115 ஓட்டங்களில் ஹென்றி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேலும் 242 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.
Test century 14 for Angelo Matthews ?
— ICC (@ICC) March 12, 2023
Sri Lanka's push for the #WTC23 continues as they build their second innings lead.
Watch #NZvSL live with a Black Caps Pass on https://t.co/CPDKNxoJ9v ? pic.twitter.com/rQb8BlRj05
Another good session for the Sri Lanka with the score at 251/5, lead by 233 runs.#NZvSL pic.twitter.com/VoFIHQ0FFD
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 12, 2023