39வது அரைசதம் விளாசிய இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அரைசதம் அடித்தார்.
காலே டெஸ்ட்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் காலேவில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் நிஷன் மதுஷ்கா 4 ஓட்டங்களில் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் குசால் மெண்டிஸ் 12 ஓட்டங்களிலும், கேப்டன் கருணரத்னே 29 ஓட்டங்களிலும், சண்டிமல் ஒரு ரன்னிலும் வெளியேறினர்.
39வது அரைசதம்
அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக தனஞ்சய டி சில்வாவும் சிறப்பாக ஆடினார்.
இந்த கூட்டணியின் மூலம் இலங்கை அணி 150 ஓட்டங்களை கடந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்டில் தனது 39வது அரைசதத்தை விளாசினார்.
அதேபோல் 50வது டெஸ்டில் விளையாடும் தனஞ்சய டி சில்வா தனது 12வது அரைசதத்தை அடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |