ஏஞ்சலோ மேத்யூஸுக்கு நூறு, துனித்திற்கு முதல் டெஸ்ட்! கெத்தாக களமிறங்கிய இலங்கை வீரர்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துனித் வெல்லலகே அறிமுகமானார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, காலேவில் கடந்த 20ஆம் திகதி முடிந்தது. பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இலங்கை வீரர் துனித் வெல்லலகே இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.
ஐந்து ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள 19வது வயதான வெல்லலகே தற்போது டெஸ்டிலும் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு சக அணி வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
PC: Twitter (@ICC)
அதே போல் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு இது 100 டெஸ்ட் போட்டியாகும். மேத்யூஸ் 100 டெஸ்ட் போட்டிகளால் 6887 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதம், 38 அரை சதம் அடங்கும்.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.
PC: Twitter (@OfficialSLC)
PC: Twitter (@OfficialSLC)
PC: Twitter (@OfficialSLC)
PC: Twitter (@OfficialSLC)