மகத்தான சாதனை படைத்த முதல் இலங்கை வீரர் இவர் தான்! ஐசிசி அறிவிப்பு
ஒரு மாதத்தின் சிறந்த வீரர் என்ற ஐசிசி-யின் விருதினை பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் படைத்துள்ளார்.
ஐசிசி Player of the Month எனும் ஒரு மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு மே மாதத்திற்கான சிறந்த வீரரை ஐசிசி அறிவித்துள்ளது.
இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மே 2022க்கான ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Photo Credit: Getty Images
வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் மிரட்டலான ஆட்டத்தை மேத்யூஸ் வெளிப்படுத்தினார். அந்த அணிக்கு எதிராக 199 மற்றும் 145 ஓட்டங்களை அவர் விளாசியிருந்தார்.
இந்த நிலையில், ஐசிசியின் இந்த விருதை பெறும் முதல் இலங்கை வீரர் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் படைத்துள்ளார். விருது குறித்து பேசிய மேத்யூஸ், 'இந்த மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை பெற்றதில் நான் மிகவும் பெருமையடைகிறேன் மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விருதுக்கு பரிசீலனையில் இருந்த அசித்த பெர்னாண்டோ மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் அற்புதமான செயல்பாடுகளுக்காக நான் அவர்களை வாழ்த்த விரும்புகிறேன்.
Photo Credit: ICC
இந்த வாய்ப்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எப்போதும் போல் என்னை நம்பி எனக்கு ஆதரவளித்த சர்வ வல்லமையுள்ள, எனது அணியினர், துணை ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதை இலங்கை மக்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நம்புவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.