42வது அரைசதம் விளாசிய ஏஞ்சலோ மேத்யூஸ்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அரைசதம் அடித்தார்.
ஜேமி ஸ்மித் 111
ஓல்டு டிராஃபோர்டில் நடந்து வரும் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 358 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 111 ஓட்டங்களும், ஹாரி புரூக் 56 ஓட்டங்களும் எடுத்தனர். அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், பிரபத் ஜெயசூரியா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி துடுப்பாடி வருகிறது. மதுஷ்கா, குசால் மெண்டிஸ் டக்அவுட் ஆக, திமுத் கருணரத்னே 27 ஓட்டங்களில் வெளியேறினார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் அரைசதம்
அதன் பின்னர் வந்த தனஞ்செய டி சில்வா 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போட்ஸ் ஓவரில் lbw ஆகி வெளியேறினார்.
எனினும் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். இது அவரது 42வது டெஸ்ட் அரைசதம் ஆகும்.
இலங்கை அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 55 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
Chipping away with the ball ☝
— England Cricket (@englandcricket) August 23, 2024
Catch Up: https://t.co/3J9ouQuVTn ?
??????? #ENGvSL ?? #EnglandCricket pic.twitter.com/jaxPony9Gv
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |