கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ்.. மீண்டும் அணியுடன் இணைவார் என அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் பாதி போட்டியிலேயே வெளியேறினார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேத்யூஸ் குணமடைந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தேர்வுக்கு வருவார் எனவும், அவருக்கு விளையாட்டில் ஈடுபட மருத்துவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் மேத்யூஸ் இன்றுமுதல் தன் அணியுடன் மீண்டும் இணைவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
? Update on Angelo Mathews
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 5, 2022
Angelo Mathews, who contracted Covid-19 has recovered and will be available for selections for the 2nd Test.
Medical clearance has been given for the player to engage in the game.
Accordingly, Mathews will rejoin the team, starting today.#SLvAUS pic.twitter.com/rCpyjZah7t