துரதிர்ஷ்டவசமாக இலங்கை செல்லவில்லை: சிறந்த அணி வெல்லட்டும் - ஏஞ்சலோ மேத்யூஸ்
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஐசிசிக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ்
2026 டி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணி வெற்றி பெறாமல் வெளியேறியது.
இந்தத் தொடரில் இலங்கையின் முன்னாள் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) வர்ணனையாளராக செயல்பட்டார்.
அவர் ஐசிசிக்கு வாழ்த்து தெரிவித்தும், இலங்கை அணி வெளியேறியது குறித்தும் பதிவிட்டுள்ளார்.

அவரது எக்ஸ் தள பதிவில், "ஐசிசிக்கு மிகவும் நன்றி; மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! துரதிர்ஷ்டவசமாக இலங்கை அணி 2வது சுற்றில் எந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை!
நாம் அனைவரும் விரும்பியதும், எதிர்பார்த்ததும் இதுவல்ல. அரையிறுதிப் போட்டியாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள், சிறந்த அணி வெற்றி பெறட்டும்" என கூறியுள்ளார்.
Thank you @ICC had so much fun ! Unfortunate srilanka could not win any games in round 2 and go through to the semis! Not what we all wanted and hoped for.Good luck to the semi finalists may the best team win pic.twitter.com/gkhICBmsFY
— Angelo Mathews (@Angelo69Mathews) March 2, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |