100வது டெஸ்டில் வெற்றி மகுடம் சூடிய ஏஞ்சலோ மேத்யூஸ்! குவியும் பாராட்டுக்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், தனது 100வது டெஸ்டில் வெற்றி பெற்ற வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்துள்ளது. முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்த இலங்கை, அதற்கு பழி தீர்க்கும் வகையில் 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்தப் போட்டி இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு 100வது டெஸ்ட் ஆகும். ஆனால் அவரால் பெரிதளவில் ஓட்டங்களை எடுக்க முடியவில்லை. முதல் இன்னிங்சில் 35 ஓட்டங்கள் எடுத்த மேத்யூஸ், இரண்டாவது இன்னிங்சில் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
Focus News
எனினும் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம், ஏஞ்சலோ மேத்யூஸுக்கு 100வது டெஸ்ட் வெற்றி மகுடமாக அமைந்துள்ளது. அவருக்கு வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அணியில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 6வது வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆவார். அவருக்கு முன் மஹேல ஜெயவர்த்தனே, குமார் சங்கக்காரா, முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் மற்றும் சனத் ஜெயசூரியா ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்.
A fine 100th Test for @Angelo69Mathews, the sixth Sri Lankan to join the elite list ?#SLvPAK | #WTC23 pic.twitter.com/9nTflb8pU9
— ICC (@ICC) July 28, 2022