உடலை வில்லாய் வளைத்து உடற்பயிற்சி! ஏஞ்சலோ மேத்யூஸ் வெளியிட்ட வீடியோ
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 5வது இலங்கை வீரர் என்ற பெருமையை சமீபத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றார்
ஏஞ்சலோ மேத்யூஸ் 218 ஒருநாள் போட்டிகளில் 5835 ஓட்டங்களும், 3 சதம் மற்றும் 40 அரைசதம் விளாசியுள்ளார்
இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இடம்பெறவில்லை. எனினும் அவர் தனது உடலை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். உடலை நன்கு வளைத்து அவர் பயிற்சி செய்கிறார்.
Speed , control,stability,explosive and endurance training will prepare your body to counter extreme pressure ! Training with the best ! @dili83cyr pic.twitter.com/OwZeNdfBH5
— Angelo Mathews (@Angelo69Mathews) August 25, 2022
மேலும் 'வேகம், கட்டுப்பாடு, நிலைப்புத்தன்மை, வெடிப்பு மற்றும் சகிப்புத்தன்மையுடன் கூடிய பயிற்சி உங்கள் உடலை தீவிர அழுத்தத்தை எதிர்கொள்ள தயார்படுத்தும்! சிறந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.