தீபாவளி போனஸ் வழங்காத கோபம் .., சுங்கச்சாவடி ஊழியர்களால் அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பு
தீபாவளி போனஸ் வழங்காத கோபத்தில் கட்டணம் வசூல் செய்யாமல் சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட்டை திறந்து வைத்துள்ளனர்.
போனஸ் வழங்கவிலை
இந்திய மாநிலமான ஹரியானா, ஆக்ரா- லக்னோ விரைவு சாலையில் உள்ள ஃபதேஹாபாத் சுங்கச்சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவில்லை.
இதனால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்றன.
ஊழியர்களின் இந்த செயலால் இந்திய அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
இதில், "நான் கடந்த ஒரு வருடமாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் எங்களுக்கு எந்த போனஸும் வழங்கவில்லை.
மிகவும் கடினமாக உழைத்து வந்தாலும் எங்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கூட வழங்குவதில்லை.
இப்போது ஊழியர்களை மாற்றுவோம் என்றும், எங்களுக்கு எந்த போனஸும் வழங்க மாட்டோம் என்றும் நிறுவனம் எங்களிடம் கூறுகிறது," என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
ஸ்ரீசாய் மற்றும் தாதர் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தீபாவளி பண்டிகையின் போது வழங்கப்படும் போனஸ் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று அவர்களில் சிலர் கூறினர்.
இதையடுத்து கோபமடைந்த ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கச்சாவடியின் தடையைத் திறந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
10 மணி நேரம் நீடித்த உள்ளிருப்பு போராட்டம், அதிகாரிகளிடமிருந்து போனஸ் வழங்கப்படும் என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |