கேப்டன் பதவியில் இருந்து நீக்கம்..மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை எரித்த ரோகித் ரசிகர்..வைரல் வீடியோ
மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அறிவித்த நிலையில், ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் அணி ஜெர்சியை எரித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமை
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 15 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது.
அதனைத் தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு 2024 சீசனில் ஹர்திக் பாண்டியா தான் அணிக்கு தலைமை தாங்குவார் என மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது.
இது ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. சில ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்ஸி மற்றும் கொடிகளை எரித்தனர்.
A Rohit Sharma fan burns the Mumbai Indians jersey. pic.twitter.com/WItos5hL4H
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 16, 2023
ஜெர்ஸியை எரிக்கும் வீடியோ
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஜெர்ஸியை எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியைத் தொங்கவிட்டு அதை எரித்துள்ளார்.
இதேபோல் மேலும் பல வீடியோக்களில் மக்கள் கொடிகளை எரிப்பதைக் காட்டியது. முன்னதாக, ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது அணியின் செயல்திறன் தலைவரான மஹேல ஜெயவர்த்தனே, 'இது மரபு கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற MI தத்துவத்திற்கு உண்மையாக இருப்பது' என தெரிவித்துள்ளார்.
BCCI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |