கோலி இல்லாமலே கோப்பை வென்றவர் ரோகித்! காரணத்தை வெளிப்படுத்திய கங்குலி
ரோகித் சர்மாவை கேப்டன் பதவிக்கு தேர்வு செய்ததற்கான பின்னணி காரணத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி வெளிப்படுத்தியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கங்குலி கூறியதாவது, இரண்டு(டி20-ஒருநாள்) வெள்ளை பந்து வடிவங்களில் கேப்டனாக ரோகித்துக்கு சிறப்பான தகுதி உள்ளது.
அதனால் தான் தேர்வாளர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். சிறப்பாக செயல்படுவதற்கான வழிகளை அவர் கண்டறிவார், கண்டிப்பாக அவர் சிறப்பாக செயல்படுவார் என நான் நம்புகிறேன்.
ஐபிஎல் தொடரில் ரோகித் படைத்துள்ள சாதனை அற்புதமானது, ஐந்து முறை மும்பை அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆசியா கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் செயல்பட்டார், அதில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது, குறிப்பாக கோலி இல்லாமல் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
கோலி இல்லாமல் கோப்பையை கைப்பற்றியது அணியின் பலத்தை பறைசாற்றியது. எனவே, பெரிய போட்டிகளில் ரோகித் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்.
அவரிடம் நல்ல அணி உள்ளது. எனவே அவர்கள் அனைவரும் எல்லாத்தையும் மாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.