Zero Net Worth பற்றி தெரியுமா? அனில் அம்பானி, Byju ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்ஜியமானது இப்படி தான்!
ஜீரோ சொத்து மதிப்பு (Zero Net Worth) என்றால் என்ன என்பது பற்றியும், எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
அனில் அம்பானி (Anil Ambani)
அனில் அம்பானி கடந்த 2020 -ம் ஆண்டில் 700 மில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில், அவர் 100 மில்லியன் டொலர்களை செட்டில் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பணத்தை அவர் சொத்துக்களை விற்று செலுத்த வேண்டும் என்று கூறியது.
அதற்கு அனில் அம்பானி தரப்பில், "முதலீடுகளின் மதிப்புச் சரிந்துவிட்டதாகவும், கடன்களுக்காக வங்கிக் கணக்குகள், சொத்துக்களை வங்கிகள் எடுத்துக் கொண்ட பிறகு சொத்து மதிப்பு பூஜ்ஜியமானது என்றும்" தெரிவிக்கப்பட்டது.
பைஜூ ரவீந்திரன் (Byju Raveendran)
அதேபோல BYJU'S -ன் நிறுவனர் ரவீந்திரன் இந்திய பில்லியனர்கள் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், அவருடைய சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என்று அறிவிக்கப்பட்டது.
Forbes பத்திரிகையின் 2024 ஆம் ஆண்டுப் பணக்காரர் பட்டியலில், பைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ.17,545 கோடி என்பதிலிருந்து பூஜ்ஜியமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
சொத்துக்கள் மற்றும் கடன்கள் (Assets &Liabilities)
சொத்துக்கள் என்பது வீடு, நிலம், வாகனங்கள், முதலீடுகள், சேமிப்புகள் ஆகியவை ஆகும்.
கடன்களில் செலுத்த வேண்டிய கடன், வட்டிக்கடன், வருமான வரி, குறுகிய காலக் கடன்கள், நிலுவை வைக்கப்பட்ட பத்திரங்கள், தள்ளி வைக்கப்பட்ட வரி, அடமானங்கள், நீண்ட காலக் கடன்கள், உபகரணங்களுக்கான கடன் ஆகியவை அடங்கும்.
இதில், சொத்துகளின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டு, அதிலிருந்து கடன்களின் மொத்த மதிப்பைக் கழித்தால் சொத்து மதிப்பு கிடைக்கும்.
பூஜ்ஜிய சொத்து மதிப்பு (Zero Net Worth)
சொத்துகள் (Assets) மற்றும் கடன்கள் (Liabilities) மதிப்பு சமமாக இருக்கும்போது அவரது சொத்து மதிப்புப் பூஜ்ஜியம் என்று கணக்கிடப்படுகிறது. அதாவது இந்த சூழ்நிலையில் அவசர நிதி தேவை இருந்தால் கூட நிதி ஆதாரத்தை திரட்ட முடியாது என்பது பொருளாகும்.
பாசிடிவ் சொத்து மதிப்பு (Positive Net Worth)
கடன்களை விட சொத்துகள் அதிகமாக இருந்தால் அதிகப்படியான Financial Cushion இருக்கிறது என்று அர்த்தம். அதாவது நிதி நிலை ஸ்திரத்தைக் குறிக்கிறது.
நெக்டிவ் சொத்து மதிப்பு (Negative Net Worth)
கடன்கள் உங்கள் சொத்துகளை விட அதிகமாக இருந்தால், உங்களிடம் Financial Cushion இல்லை என்று பொருள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |