சொந்த வீட்டை இழந்து நிற்கும் முகேஷ் அம்பானியின் சகோதரர்
இந்திய அரசின் கட்டுப்பாடில் இயங்கும் அமலாக்க துறை (ED) ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் மும்பை வீடான Abode-ஐ ரூ.3,716 கோடி மதிப்பில் முடக்கியுள்ளது.
பல வங்கிகளுக்கு
பண சலவை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அனில் அம்பானி மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு எதிராக இந்த வீடு கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 17 மாடிகளைக் கொண்ட இந்த ஆடம்பர வீடு மும்பையின் பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கின் கீழ் இந்த சொத்தை அமலாக்க துறை கைப்பற்றுவதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த வழக்கில் மொத்த இணைக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.15,700 கோடியாக உயர்ந்துள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல வங்கிகளுக்கு கடன் திருப்பிச் செலுத்தாமல் இருந்ததால், மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் முக்கிய தீர்ப்பு வழங்கியது.
Bank of Baroda, IDBI Bank, Indian Overseas Bank மற்றும் BDO India LLP ஆகியவை ரிசர்வ் வங்கியின் 2024 மாஸ்டர் டைரக்ஷன்ஸ் படி மோசடி நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தது.
இதன்படி டிசம்பர் 2025இல் வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், அதை சட்டவிரோதமானது மற்றும் தவறானது என்று கூறியது.
இரண்டாவது முறையாக
இந்த விவகாரத்தில் இருந்து வெளியேற அம்பானியின் சட்டத்தரணி இப்புதிய உத்தரவை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க கோரிய போதிலும், நீதிமன்றம் அதை நிராகரித்தது.
இந்த தீர்ப்பு அமலாக்க துறையின் சொத்து கைப்பற்றல் நடவடிக்கைக்கு வலு சேர்த்துள்ளது. அனில் அம்பானி PMLA-யின் கீழ் இரண்டாவது முறையாக பிப்ரவரி 26 அன்று அமலாக்க துறையின் முன் ஆஜராக உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2025இல் முதல் முறை விசாரணைக்கு ஆஜராகி அறிக்கை அளித்திருந்தார். இந்த வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ன் வங்கி கடன் தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன.
அமலாக்க துறை இந்த சொத்தை கைப்பற்றியது மூலம் அனில் அம்பானி மோசடி செய்த தொகையை மீட்க முயல்கிறது. ஆனில் அம்பானி ஏற்கனவே தனது சொத்து மதிப்பு ஜீரோ என அறிவித்த நிலையில் தற்போது இவருடைய வீடும் அவரை விட்டு போகும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |