40,000 கோடி கடன், நகைகளை விற்ற பரிதாபம்! அனில் அம்பானிக்கு இப்படி ஒரு நிலையா?
வெற்றிகரமான தொழிலதிபராக இருந்த அனில் அம்பானி ஆயிரக்கணக்கான கோடி கடன்களால் பரிதாபமான நிலையில் உள்ளார்.
2008ஆம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருந்தவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி.
அப்போது அவர் முகேஷ் அம்பானியை விட அதிக சொத்து மதிப்பை கொண்டிருந்தார். ஆனால் அவர் ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொண்டார்.
அத்துடன் அனில் செய்த முதலீடுகள் எதிர்மறையாக அமைந்தது. எம்.டி.என்வுடனான ஒரு வர்த்தகத்தில் அனில் அம்பானி 200 கோடி டொலர் முதலீடு செய்த நிலையில், Reliance Communications கடனில் விழுந்தது.
மேலும், அனில் அம்பானியின் நிதி முறைகேடுகள், சீன வங்கிகளில் கடன் வாங்கியது மற்றும் முகேஷ் அம்பானியின் ஜியோ வருகை ஆகியவை அவரது தொலைத்தொடர்பு வர்த்தகத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
Reuters
அதனைத் தொடர்ந்து, அனில் அம்பானி நிறுவனம் 2020ஆம் ஆண்டில் திவாலாகி விட்டதாக அறிவித்தார். அத்துடன் சட்டம் தொடர்பான கட்டணங்களை செலுத்த தனது குடும்பத்தின் நகைகளை விற்பனை செய்ததாக அவர் கூறினார்.
தற்போது அனில் அம்பானியின் நிறுவனங்கள் ரூ.40,000 கோடிக்கு மேல் கடனை கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 4,200 கோடி டொலரில் இருந்து 170 கோடி டொலராக சரிந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |