கடனில் மூழ்கிய ஒரு காலம்... சத்தமில்லாமல் அசுர வளர்ச்சி காணும் அனில் அம்பானி
இந்திய அரசாங்கத்தின் 2024 நிதிநிலை அறிக்கை வெளியானதில் இருந்து ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் உயரங்கள் தொட்டு வருகிறது.
கணிக்கும் நிபுணர்கள்
ஜூலை 23ம் திகதி வர்த்தக முடிவின் போது ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் ரூ 26.94 என பதிவானது. ஆனால் அதன் பின்னர் 52 வாரங்களில் இல்லாத வளர்ச்சியை ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பதிவு செய்துள்ளது.
அதாவது ரூ 34.54 வரையில் ரிலையன்ஸ் பவர் பங்குகளின் விலை உயர்ந்தது. 30 சதவிகித வளர்ச்சி என்பது கடனில் தத்தளிக்கும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தை சிக்கலில் இருந்து மீட்கும் என்றே சந்தை நிலவரத்தை கணிக்கும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மொத்தமாக மீளும்
மட்டுமின்றி ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ரூ 800 கோடி கடனை சமீபத்தில் திருப்பிச் செலுத்தியுள்ளது. தற்போதைய நிலை நீடிக்கும் என்றால் 2025ல் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கடனில் இருந்து மொத்தமாக மீளும் என்றே கூறுகின்றனர்.
ஜூலை 23ம் திகதி ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 10,813 கோடி என இருந்தது. ஆனால் ஆகஸ்டு 2ம் திகதி ரூ 13,886 என பதிவாகியுள்ளது. இதனாலையே, அனில் அம்பானி சத்தமில்லாமல் சாதித்து வருவதாக வர்த்தகங்களை கண்காணிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |