நிர்வாக சீர்கேடு... இன்னொரு நிறுவனத்தை இழக்கும் அனில் அம்பானி
ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, தனது நிர்வாக சீர்கேடு காரணமாக இன்னொரு நிறுவனத்தை இழக்கிறார்.
அனில் அம்பானி இழக்கிறார்
நிர்வாக சீர்கேடுகள் காரணமாக கடனில் மூழ்கியிருந்த Reliance Capital என்ற நிறுவனத்தையே அனில் அம்பானி இழக்கிறார். ரூ 9650 கோடி தொகைக்கு இந்துஜா குழுமம் ஏற்கனவே ஏலத்தில் எடுத்திருந்தது.
தற்போது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் ரூ 2750 கோடியை அனில் அம்பானிக்கு செலுத்தியுள்ளதாக இந்துஜா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கிக்கும் தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறைக்கும் ஒப்புதல் நடவடிக்கையை முன்னெடுக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளது.
இந்துஜா குழுமம் செலுத்த வேண்டிய முதல் தவணை மூன்று முறை மீறப்பட்ட நிலையில், ஆகஸ்டு 10ம் திகதிக்கு நீட்டிக்க செய்ததுடன் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவரவும் கோரப்பட்டது.
ரூ 40,000 கோடிக்கு மேல் கடனில்
இந்துஜா குழும நிறுவனம் நிலுவையில் உள்ள ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் இணக்கத் தேவைகள் ஆகியவையே தவணை நீட்டிப்புக்கான காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளன.
இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28ம் திகதிக்கு தீர்ப்பாயம் ஒத்திவைத்தது. கடந்த பிப்ரவரி 27ம் திகதி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் இந்துஜா குழுமத்திற்கு Reliance Capital நிறுவனம் தொடர்பில் ஒப்புதல் அளித்திருந்தது.
ரூ 40,000 கோடிக்கு மேல் கடனில் சிக்கியுள்ள Reliance Capital நிறுவனத்தை இந்துஜா குழுமம் ரூ 9,650 கோடிக்கு கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |