கடனில் மூழ்கிய அனில் அம்பானிக்கு தோள் கொடுத்த இரு பிள்ளைகள்... அவர்களின் தற்போதைய நிலை
சமீபத்திய ஆண்டுகளில், முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி, அவரது தொழில் வளர்ச்சியில் சாதகமான மாற்றத்தைக் கண்டுள்ளார்.
பின்னணியில் செயல்பட்ட
அவரது கடன் நெருக்கடிகள் குறைந்து வருவதுடன், அவரது நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுகின்றன. இதனால் துணை நிறுவனங்களைத் தொடங்குகிறார். இந்த மாற்றங்கள் அனைத்தும் அவரது நிறுவனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தின் பின்னணியில் செயல்பட்ட முக்கியமானவர்கள் அனில் அம்பானியின் மகன்களான ஜெய் அன்மோல் அம்பானி மற்றும் ஜெய் அன்ஷுல் அம்பானி ஆகிய இருவருமே.
அவர்கள் தற்போது தங்கள் தந்தையின் நிறுவனங்களை நிர்வகிப்பதில் பங்கு வகிக்கின்றனர். அனில் அம்பானியின் மூத்த மகன் ஜெய் அன்மோல், டிசம்பர் 12, 1991ல் மும்பையில் பிறந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை புகழ்பெற்ற கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் பயின்றார்.
ஜெய் அன்ஷுல் அம்பானி, கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் பயின்றார், பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். ஜெய் அன்மோல் அம்பானி குடும்பத் தொழிலுக்கு புத்துயிர் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் தனது 18வது வயதில் பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் படிப்படியாக பொறுப்புகளை ஏற்கத்தொடங்கினார்.
தந்தையின் நிறுவனங்களை
2016ல், அவர் ரிலையன்ஸ் கேபிட்டல் நிர்வாகத்தில் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார், பின்னர் அதன் நிர்வாக இயக்குநரானார். ஜெய் அன்ஷுல் அம்பானியும் குடும்பத்தின் வணிக முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார்.
இரு சகோதரர்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் அதே வேளையில் தங்கள் தந்தையின் நிறுவனங்களை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர்.
ஜெய் அன்ஷுலிடம் Mercedes GLK350, Lamborghini Gallardo, Rolls-Royce Phantom, Range Rover Vogue, மற்றும் Lexus SUV ஒன்றும் உள்ளது. அத்துடன் Bombardier Global Express XRS, Bell 412 helicopter, Falcon 2000, and Falcon 7X ஆகிய தனிநபர் விமானங்களும் சொந்தமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |