இன்று கடனாளி, மோசடி வழக்குகள்... அன்று ரூ 400 கோடி சொகுசு படகை மனைவிக்கு பரிசளித்த கோடீஸ்வரர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொகுசு வாழ்க்கை முறையைப் பற்றிப் பல கதைகளைக் கேட்டிருக்கலாம்.
விலையுயர்ந்த பரிசு
முகேஷ் அம்பானியின் சொகுசு கார்கள், ஆடம்பரமான வீடு, அவரது அதி-ஆடம்பர வாழ்க்கை முறை தொடர்பான கிட்டத்தட்ட அனைத்தும் மிக விரிவாகவே ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

அம்பானி குடும்பத்தைப் பற்றி தொடர்ந்து செய்திகளில் இடம் பெறும் ஒரு விடயம், விலையுயர்ந்த பரிசுகளைப் பரிமாறும் கலாச்சாரம். அம்பானி குடும்பத்தில் பரிசு வழங்குவது எப்போதுமே ஒரு சிறந்த விடயமாக இருந்து வருகிறது.
அனில் அம்பானி தனது மனைவியை ஆடம்பரமான பரிசுகளால் ஆச்சரியப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். முகேஷ் அம்பானி ஒருமுறை தனது மனைவி நீதா அம்பானியின் 44வது பிறந்தநாளுக்கு ரூ 250 கோடி மதிப்புள்ள சொகுசு கார்ப்பரேட் ஜெட் விமானம் ஒன்றை பரிசளித்தார்.
தற்போது கடனாளியாகவும், பண மோசடி வழக்குகளால் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளும் அனில் அம்பானியும் ஒருமுறை தமது மனைவிக்கு பல கோடிகள் மதிப்பிலான பரிசுகளை அளித்துள்ளார்.

நீண்ட நாள் கனவு
இந்தி திரைப்பட உலகின் முன்னாள் நடிகையான டினா முனிம் என்பவரை திருமணம் செய்துள்ள அனில் அம்பானி, தமது மனைவிக்கு ரூ 400 கோடி மதிப்பிலான சூப்பர் சொகுசு படகு ஒன்றை பரிசளித்திருந்தார்.

தற்போது 68 வயதாகும் டினா அம்பானியின் 64வது பிறந்தநாளுக்கு அனில் அம்பானி தனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்றை நிறைவேற்றினார். Tian என்ற அந்த சொகுசு படகானது பிரபலங்களின் பிறந்தநாள் பரிசுகளில் மிகவும் பேசப்படும் ஒன்றாக மாறியது.
இந்தப் பரிசு அவர்களின் பிணைப்பை பிரதிபலித்ததோடு மட்டுமல்லாமல், அம்பானி சகோதரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அசாதாரண பரிசுகளை வழங்கும் குடும்ப பாரம்பரியத்தை எவ்வாறு தொடர்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |