பத்திரனாவைத் தாண்டி சிந்திக்க வேண்டும்: CSK அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில மாற்றங்களை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஐந்து முறை சாம்பியன்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
[G8GADLG}
இது தோனி மற்றும் CSK அணி ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து முறை சாம்பியனான CSK அணியின் மோசமான செயல்பாடு ஃப்ளே ஆப் சுற்றை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு முடிந்துவிட்டதால், முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அனில் கும்ப்ளே
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே (Anil Kumble) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அவர், "ரச்சின் ரவீந்திர ஒரு அற்புதமான இளம் திறமைசாலி. ஆனால் இந்த வடிவத்தில், அவர் கொஞ்சம் அவசரப்படுவது போல் தெரிகிறது. ஒருவேளை 3வது துடுப்பாட்ட வரிசை அவருக்கு பொருத்தமாக இருக்கலாம். ஷிவம் தூபேவை தவிர மிடில் ஆர்டரில் பலமான துடுப்பாட்ட வீரர்கள் இல்லை.
பிரேவிஸ் மற்றும் மாத்ரே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவது நேர்மறையான விடயம். ஆனால், அவர்கள் பத்திரனாவைத் தாண்டி சிந்திக்கத் தொடங்க வேண்டும். நாதன் எல்லிஸ் ஒரு அனுபவம் வாய்ந்த டெத் பந்துவீச்சாளர்.
ஆனால் முதல் போட்டிக்கு பிறகு அவர் இடம்பெறவில்லை. ஐந்து ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து எதிர்காலத்திற்கான கட்டமைப்பைத் தொடங்க இது சரியான நேரம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |