மறைந்த ஷேன் வார்னேவின் ரகசியத்தை போட்டுடைத்த இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்!
ஷேன் வார்னே குறித்து பலருக்கும் தெரியாத ரகசியத்தை அனில் கும்ப்ளே வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று முன் தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே முக்கிய ரகசியத்தை உடைத்துள்ளார்.
வார்னேவுக்காக அவுஸ்திரேலிய அணி எப்படி செயல்படுவது என்பதில் சுவாரஸ்யமாக இருக்கும். களத்திற்கு செல்லும் எதிரணி பேட்ஸ்மேன் வார்னேவின் நண்பர் எனத் தெரிந்தால், அவரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியளவில் அவுஸ்திரேலிய வீரர்கள் அச்சுறுத்தல் கொடுக்க மாட்டார்கள்.
மிகவும் நட்பு ரீதியான போட்டி தான் அங்கு நடக்கும். எனக்கு நேர்ந்த சம்பவம் ஒருமுறை நானும் பேட்டிங்கிற்கு சென்ற போது பார்ட்னர்ஷிப் அமைத்தேன்.
ஆனால் வார்னேவின் நண்பன் என்பதால் எனக்கு பெரியளவில் அவுஸ்திரேலிய வீரர்கள் வம்பிழுக்கவில்லை. ஜாலியாக போட்டி நடந்தது. தனது நட்பு வட்டாரத்தை ஷேன் வார்னே இப்படி தான் பாதுகாப்போடு பார்த்துக் கொள்வார் என கூறியுள்ளார்.