இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளி பயணம்: யார் இந்த அனில் மேனன்?
கேரளாவை சேர்ந்த அனில் மேனன் நேற்று இரவு தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளி பயணம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் நேற்றிரவு 8.17 மணிக்கு கஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் எம்எஸ் 29 விண்கலம் மூலம் தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கினார்.
அனில் மேனன் பயணம் செய்த விண்கலமானது தற்போது பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

அனில் மேனன் உடன் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோரும் தங்கள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 8 மாதங்கள் இவர்களது விண்வெளி ஆய்வுப் பயணம் தொடரும் என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அனில் மேனன்
கேரள மாநிலம் பாலக்காட்டின் ஒட்டப்பாலத்தை சேர்ந்த சங்கரன் மேனன் மற்றும் உக்ரைனின் எலிசபெத் சமோய்லென்கோ ஆகிய தம்பதியினரின் மகன் தான் அனில் மேனன் ஆவார்.

அனில் மேனன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து இருப்பதோடு, டாக்டராகவும் பயிற்சி பெற்றுள்ளார்.
மேலும் அமெரிக்க விண்வெளிப் படையின் பைலட்டாகவும் அனில் மேனன் பணியாற்றியுள்ளார்.
பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிகாட்டிய அனில் மேனன் நாசாவின் விண்வெளி குழுவில் இடம்பெற்றுள்ளார்.
தன்னுடைய முதல் விண்வெளிப் பயணத்தில் அனில் மேனன், நீண்ட காலம் விண்வெளியில் தங்குவதால் மனிதர்களின் உடல் நலத்தில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |