தீயாக பரவிய திருமண செய்தி - விளக்கமளித்துள்ள இசையமைப்பாளர் அனிருத்
திருமணம் குறித்து வெளியான தகவலுக்கு இசையமைப்பாளர் அனிருத் விளக்கமளித்துள்ளார்.
அனிருத் திருமணம்?
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர்(34).
தற்போது, கூலி, மதராஸி, ஜனநாயகன், ஜெயிலர் 2 போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், அனிருத், சன் குழும தலைவர் கலாநிதிமாறனின் மகளும், SRH அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனை(32) திருமணம் செய்ய உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இந்த தகவலை மறுத்த அனிருத், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் "திருமணமா? வதந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.
Marriage ah? lol .. Chill out guys 😃 pls stop spreading rumours 🙏🏻
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |