பிரபல இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்!
எஸ்.வி.ரமணன் மரணம்.
இவர் தற்போது டிரண்டிங்கில் உள்ள இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா ஆவார்.
இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தாவும், பிரபல இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர் எஸ் வி ரமணன்.
இயக்குனராக உருவங்கள் மாறலாம், துரை பாபு ஷோபனம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் இசையமைப்பாளராக பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ரமணன் இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் தாய் வழி தாத்தா ஆவார்.
இந்த நிலையில் தற்போது இவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.