காவ்யா மாறனை கரம் பிடித்த இசையமைப்பாளர் அனிருத்
anirudh married kavya maran at greece: இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றுள்ளது.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் SRH அணி உரிமையாளர் காவ்யா மாறனுக்கு இன்று கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
நவம்பர் 21 ஆம் திகதி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கு வகையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.