இசையமைப்பாளர் அனிருத்தின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., எத்தனை கோடிகள் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்தர்.
ரஜினியின் உறவினரான அனிருத் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
முதல் பட பாடல்களின் வெற்றிக்கு பிறகு எங்கும் அனிருத் மயமாகத்தான் இருந்தது.
விஜய், ரஜினி, கமல் என அனைவரும் தனது படங்களுக்கு அனிருத் இசையமைப்பதையே விரும்புகிறார்கள்.
கடைசியாக அவரது இசையமைப்பில் வேட்டையன், இந்தியன் 2, தேவரா உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகின.
இதற்கடுத்ததாக கூலி, விடாமுயற்சி, தளபதி 69 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.
தமிழில் மட்டும் தடம் பதித்துவந்த அனிருத் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறார்.
இந்நிலையில், ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்றும் தகவல் சொல்லப்படுகிறது.
அதன்படி மொத்தம் அவருக்கு 70 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம்.
ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவரிடம் BMW, PORSCHE உள்ளிட்ட சொகுசு கார்களும் இருக்கின்றன.
அதுமட்டுமின்றி ஹோட்டல் தொழிலை செய்துவரும் அவருக்கு அதன் மூலமும் வருமானம் கொட்டுகிறதாம்.
மேலும், கான்செர்ட் மூலமும் நல்ல பணம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |