தோனியின் ரசிகனான நான் ஏன் CSKக்கு தீம் மியூசிக் போடலன்னு தெரியுமா? - அனிருத் ஓபன் டாக்
CSKக்கு தீம் மியூசிக் போட மறுத்த காரணத்தை இசையமைப்பாளர் அனிருத் மனம் திறந்து பேசியுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல், இந்தி உட்பட பல மொழிகளில் இவருக்கு மவுசு பெருகிக்கொண்டே போகிறது. முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் தற்போது நடித்து வரும் படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் அனிருத்.
மனம் திறந்து பேசிய அனிருத்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஆனால், ஐபிஎல் தொடரில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அனிருத் தீம் மியூசிக் போட மறுத்துள்ளார். அதற்கான காரணத்தை அவர் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த 2018-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அப்போது, CSK அணி நிர்வாகத்தினர் என்னிடம், தீம் மியூசிக் இசையமைத்து தரும்படி கேட்டனர்.
ஆனால், நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஏன்னா, சிஎஸ்கே அணிக்காக சுயாதீன இசைக் கலைஞர்கள் இசையமைத்த ‘விசில் போடு பாடல்’ சூப்பர் ஹிட். சிஎஸ்கே ரசிகனான எனக்கு அந்த பாட்டு ரொம்ப பிடித்து விட்டது.
மைதானத்தில் தோனி சிக்ஸர் அடித்தால், நான் விசில் போட்டுதான் கொண்டாடுவேன். நான் என்னதான் சிஎஸ்கே அணிக்காக இசையமைத்தாலும், விசில் போடு தீம் மியூசிக்கை பீட் பண்ணவே முடியாது.
எப்படி அண்ணாமலை படம் என்றால், ஓப்பனிங் டைட்டில் கார்டு சாங் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறதோ, அதுபோல தான் விசில் போடு பாட்டு எனக்கு ஞாபகத்திற்கு வரும். அதனால்தான் நான் தீம் மியூசிக் இசையமைக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன் என்றார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சுயாதீன இசைக்கலைஞர்களின் இசையை அங்கீகரித்து, அவருடைய பாடலுக்கும் மதிப்பளித்து அனிருத் செய்த செயல் நெகிழ்ச்சியை அளிக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.